• May 12 2024

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி காணிப்பத்திரம் கையளிப்புடன் அதிபர் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு...!samugammedia

Sharmi / Nov 18th 2023, 11:05 am
image

Advertisement

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நீண்டநாள் தேவையாக இருந்த அதிபருக்கான   காரியாலயம் உத்தியோகபூர்வமாக இன்று(17) திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் ஐ.உபைதுல்லாஹ்வின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம்,விஷேட விருந்தினராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் மற்றும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன செய்ற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும், கௌரவ அதிதியாக கலந்து கொள்ள இருந்த பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலிக்கு பதிலாக காணி உத்தியோகத்தர் ஏ.எச்.எம் கிபாயத்துல்லாவும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன்   மாணவர்களின் கலை கலாசாரத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதான நிகழ்வாக பாடசாலைக்கான விடுதி வசதியினை அமைப்பதற்குரிய காணிப் பத்திரம் காணி உத்தியோகத்தர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை அதிபரிடம் பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஓய்வுபெற்ற அதிபர்கள் ஆகியோரின் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நிகழ்வின் இறுதியில்  அதிபருக்கான பிரத்தியேக காரியாலயம் உத்தியோகபூர்வமாக அதிதிகளால்  திறந்து வைக்கப்பட்டது.






மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி காணிப்பத்திரம் கையளிப்புடன் அதிபர் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு.samugammedia அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நீண்டநாள் தேவையாக இருந்த அதிபருக்கான   காரியாலயம் உத்தியோகபூர்வமாக இன்று(17) திறந்து வைக்கப்பட்டது.பாடசாலையின் முதல்வர் ஐ.உபைதுல்லாஹ்வின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சகுதுல் நஜீம்,விஷேட விருந்தினராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் மற்றும் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன செய்ற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும், கௌரவ அதிதியாக கலந்து கொள்ள இருந்த பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலிக்கு பதிலாக காணி உத்தியோகத்தர் ஏ.எச்.எம் கிபாயத்துல்லாவும் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன்   மாணவர்களின் கலை கலாசாரத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதான நிகழ்வாக பாடசாலைக்கான விடுதி வசதியினை அமைப்பதற்குரிய காணிப் பத்திரம் காணி உத்தியோகத்தர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை அதிபரிடம் பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஓய்வுபெற்ற அதிபர்கள் ஆகியோரின் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பின்னர் நிகழ்வின் இறுதியில்  அதிபருக்கான பிரத்தியேக காரியாலயம் உத்தியோகபூர்வமாக அதிதிகளால்  திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement