• May 17 2024

ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் செய்த மாஸ் யோகா! samugammedia

Tamil nila / Nov 20th 2023, 4:38 pm
image

Advertisement

ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.

பாலஸ்தீனத்துடனான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதை வெளிகாட்டும் பொருட்டு, இஸ்ரேலிய பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.

முன்னதாக, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது முதல் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலிய மக்கள் பலரை பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இந்த நிலையில், பிணையக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், பலியான அப்பாவிகளின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்தவும், இஸ்ரேலிய பெண்கள் டெல் அவிவ் கடற்கரையோரத்தில் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர். ஒற்றுமையின் சக்திவாய்ந்த காட்சியாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.



பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தங்களுடன் வைத்துக் கொண்டு அவர்கள் யோகா செய்தனர்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 240 பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாஷிங்டன் போஸ்ட்டின் தகவலின்படி, பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக ஐந்து நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.




ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் செய்த மாஸ் யோகா samugammedia ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.பாலஸ்தீனத்துடனான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதை வெளிகாட்டும் பொருட்டு, இஸ்ரேலிய பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.முன்னதாக, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது முதல் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலிய மக்கள் பலரை பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இந்த நிலையில், பிணையக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், பலியான அப்பாவிகளின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்தவும், இஸ்ரேலிய பெண்கள் டெல் அவிவ் கடற்கரையோரத்தில் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர். ஒற்றுமையின் சக்திவாய்ந்த காட்சியாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தங்களுடன் வைத்துக் கொண்டு அவர்கள் யோகா செய்தனர்.இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 240 பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாஷிங்டன் போஸ்ட்டின் தகவலின்படி, பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக ஐந்து நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement