• May 20 2024

தென்கொரியாவில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

Chithra / Feb 7th 2024, 8:17 am
image

Advertisement

 

தென் கொரியாவில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நாசு நகரில் உள்ள தொழிற்சாலையில் அந்நாட்டு நேரத்தில் காலை 11.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், இங்கு 540 மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மின் கசிவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிவதாகவும் அதிக அளவிலான இலங்கையர்களும் அங்கு பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்

தென்கொரியாவில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து  தென் கொரியாவில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.நாசு நகரில் உள்ள தொழிற்சாலையில் அந்நாட்டு நேரத்தில் காலை 11.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அப்போது பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், இங்கு 540 மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மின் கசிவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிவதாகவும் அதிக அளவிலான இலங்கையர்களும் அங்கு பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement