ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் பாரிய மோசடியில் ஈடுபட்டதாகவும் பயனாளிகளக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்ட்டுள்ளது
அதாவது ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து 297000 ரூபா ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக 15 இரட்டை வலைகள் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த வருடம் (2024) ஒப்படைக்கப்பட்ட வலைகளை ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமாக பெற்று பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
வலைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் விபரத்தை கோரி பிரதேச செயலகம் அனுப்பிய கடிதத்தின் பின்னரே குறித்த மோசடி வெளிப்பட்டுள்ளது
இது குறித்து ஆழியவளை கிராம சேவகரை தொடர்புகொண்டு வினவிய வேளைஇ கடந்த வருடம் (2024) ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தினரிடம் 297000 பெறுமதியான வலைகள் ஒப்படைக்கப்பட்டை உண்மை. அத்துடன் வலை பெற்றமையானது மீனவர்கள் யாருக்கும் தெரியாது என்ற முறைப்பாடு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.
பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆழியவளை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழியவளை கடற்றொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி - பயனாளிகளுக்கு அநீதி ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் பாரிய மோசடியில் ஈடுபட்டதாகவும் பயனாளிகளக்கு அநீதி இழைத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்ட்டுள்ளதுஅதாவது ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து 297000 ரூபா ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக 15 இரட்டை வலைகள் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த வருடம் (2024) ஒப்படைக்கப்பட்ட வலைகளை ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமாக பெற்று பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.வலைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் விபரத்தை கோரி பிரதேச செயலகம் அனுப்பிய கடிதத்தின் பின்னரே குறித்த மோசடி வெளிப்பட்டுள்ளது இது குறித்து ஆழியவளை கிராம சேவகரை தொடர்புகொண்டு வினவிய வேளைஇ கடந்த வருடம் (2024) ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தினரிடம் 297000 பெறுமதியான வலைகள் ஒப்படைக்கப்பட்டை உண்மை. அத்துடன் வலை பெற்றமையானது மீனவர்கள் யாருக்கும் தெரியாது என்ற முறைப்பாடு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆழியவளை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.