• Oct 05 2024

பிலிப்பின்ஸில் பயங்கர நிலச்சரிவு. - 68 போ் மண்ணுக்குள் புதைந்து உயிரிழப்பு..!!

Tamil nila / Feb 13th 2024, 7:38 pm
image

Advertisement

பிலிப்பின்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்தாக அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

மிண்டானாவ் மாகாணம், மசாரா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை மேலும் 12 உடல்கள் மீட்கப்பட்டன.அதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளதாகவும் 

இது தவிர, நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மேலும் 51 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் பிலிப்பின்ஸின் தெற்குப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள மசாரா கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் அமா்ந்திருந்த சுரங்கத் தொழிலாளா்கள் என்று கூறப்படுகிறது.சம்பவப் பகுதிகளில் ராணுவம், போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நிலச்சரிவில் காயமடைந்த 31 கிராமத்தினரை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பின்ஸில் பயங்கர நிலச்சரிவு. - 68 போ் மண்ணுக்குள் புதைந்து உயிரிழப்பு. பிலிப்பின்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்தாக அதிகாரிகள் கூறிஉள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மிண்டானாவ் மாகாணம், மசாரா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை மேலும் 12 உடல்கள் மீட்கப்பட்டன.அதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளதாகவும் இது தவிர, நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மேலும் 51 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பிலிப்பின்ஸின் தெற்குப் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள மசாரா கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகளில் அமா்ந்திருந்த சுரங்கத் தொழிலாளா்கள் என்று கூறப்படுகிறது.சம்பவப் பகுதிகளில் ராணுவம், போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நிலச்சரிவில் காயமடைந்த 31 கிராமத்தினரை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement