• Sep 08 2024

முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி; மோசடியில் சிக்கும் இலங்கையர்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jul 11th 2024, 8:41 am
image

Advertisement

 

இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, ​​அந்த தொகை இரட்டிப்பாக தங்களது வங்கிக் கணக்கில் திரும்பச்செலுத்தப்படும் என்றும் மோசடிக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிகளளவு பணம் முதலீடு செய்யப்பட்டு நான்கு மடங்கு திரும்பக் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டு இந்த மோசடி இடம்பெறுகின்றது.

நைஜீரியா போன்ற வெளிநாடுகள் ஊடாக இந்த பணமோசடி இடம்பெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த மோசடியில் வர்த்தகர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களே சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி; மோசடியில் சிக்கும் இலங்கையர்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை  இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, ​​அந்த தொகை இரட்டிப்பாக தங்களது வங்கிக் கணக்கில் திரும்பச்செலுத்தப்படும் என்றும் மோசடிக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், அதிகளளவு பணம் முதலீடு செய்யப்பட்டு நான்கு மடங்கு திரும்பக் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டு இந்த மோசடி இடம்பெறுகின்றது.நைஜீரியா போன்ற வெளிநாடுகள் ஊடாக இந்த பணமோசடி இடம்பெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், இந்த மோசடியில் வர்த்தகர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களே சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement