யாழ்ப்பாணம் தையட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டமானது நாளையதினம் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விகாரையானது பொது மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நிலையில் காணியின் உரிமையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர் போராட்டமானது ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முதல் நாளும், பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டமானது நாளையதினம் பிற்பகல் 02 மணியளவில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்போராட்த்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அத்தோடு தமிழ் அரசியல்வாதிகளும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்
தையிட்டி விகாரைக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம் யாழ்ப்பாணம் தையட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டமானது நாளையதினம் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த விகாரையானது பொது மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நிலையில் காணியின் உரிமையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர் போராட்டமானது ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முதல் நாளும், பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இந்த போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டமானது நாளையதினம் பிற்பகல் 02 மணியளவில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இப்போராட்த்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.அத்தோடு தமிழ் அரசியல்வாதிகளும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்