• Sep 29 2024

பாரிய போராட்டங்களால் பலர் உயிரிழப்பு: கென்யாவில் உள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தா? வெளியான அறிவிப்பு

Chithra / Jun 26th 2024, 11:35 am
image

Advertisement

 

கென்யாவில்   வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று (26) கென்யாவின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வரி விதிப்புகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை அவர்க எரியூட்டியதாகவும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதன்போது குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் இல்லை என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் கனகநாதன் தெரிவித்துள்ளார்.  

பாரிய போராட்டங்களால் பலர் உயிரிழப்பு: கென்யாவில் உள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தா வெளியான அறிவிப்பு  கென்யாவில்   வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நேற்று (26) கென்யாவின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வரி விதிப்புகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.இதன்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை அவர்க எரியூட்டியதாகவும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.இதன்போது குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையும் இல்லை என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் கனகநாதன் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement