• Oct 09 2024

மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு?

Sharmi / Sep 7th 2024, 11:27 pm
image

Advertisement

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று கடந்த வாரம்  தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம்(07) தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர்  அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டார்.

வலி வடக்கின் பல்வேறு கிராமங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீன் ஆகியோருடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில்  கலையமுதன் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று கடந்த வாரம்  தீர்மானம் எடுத்துள்ளது.இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம்(07) தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர்  அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில் ஈடுபட்டார்.வலி வடக்கின் பல்வேறு கிராமங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீன் ஆகியோருடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில்  கலையமுதன் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement