• Oct 09 2024

Sharmi / Sep 7th 2024, 11:31 pm
image

Advertisement

மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

இதன்பிரகாரம் அரசின் எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ பக்கம் நிற்கும் 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி பறித்துள்ளார். ஏனைய நால்வரின் பதவிகளும் விரைவில் பறிக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே ராஜபக்ஷ முகாமில் உள்ள சி.பி. ரத்னாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்ன, சாகர காரியவசம், ஷசீந்திர ராஜபக்ஷ, நிபுன ரணவக்க உட்பட 27 எம்.பிக்களை அரசிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ குழாமை விரட்டியடித்த ரணில். மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.இதன்பிரகாரம் அரசின் எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.நாமல் ராஜபக்ஷ பக்கம் நிற்கும் 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி பறித்துள்ளார். ஏனைய நால்வரின் பதவிகளும் விரைவில் பறிக்கப்படவுள்ளது.இந்நிலையிலேயே ராஜபக்ஷ முகாமில் உள்ள சி.பி. ரத்னாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்ன, சாகர காரியவசம், ஷசீந்திர ராஜபக்ஷ, நிபுன ரணவக்க உட்பட 27 எம்.பிக்களை அரசிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement