• Nov 23 2024

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை - வெளியான விசேட வர்த்தமானி

Chithra / Jul 2nd 2024, 12:16 pm
image

  

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையை, மருந்தளவு வடிவம் மற்றும் வலிமை என்பவற்றை வைத்து நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட உள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை - வெளியான விசேட வர்த்தமானி   மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான முறைமையை அறிமுகப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, ஒரு குறிப்பிட்ட மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையை, மருந்தளவு வடிவம் மற்றும் வலிமை என்பவற்றை வைத்து நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட உள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement