• Nov 22 2024

அநுரவின் வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரட்டும்! - வாழ்த்துச் செய்தியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

Anaath / Sep 24th 2024, 5:47 pm
image

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திஸாநாயக்க புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு நாட்டை சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் முன்கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடதுசாரித் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், 

"இலங்கையில் முதன்முறையாக மார்க்சிய லெனினிய சிந்தனையைக் கொண்ட இடதுசாரிக் கட்சியொன்றின் தலைவர் மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். 56 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தோழர் அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றுள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் எமது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். ஒருபுறம் பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள நாடு. இலஞ்சம் ஊழல். மறுபுறம் முப்பது வருடங்களாக நடைபெற்ற பாரிய யுத்தம். இதனால் ஏற்பட்ட இழப்புகளும் பொருளாதார அழிவுகளும் இவை அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டிய ஒரு பொறுப்பிலும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

இன, மத பேதமில்லாமல் நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் செயற்பட வேண்டும் என்றும் நீங்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், இந்த நாடு நூற்றாண்டு காலமாக இன, மத, மொழி ரீதியாக பிரிந்து போயிருக்கின்றது. பௌத்தத்திற்கு முதலிடம், சிங்களத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து, பௌத்தத்திற்கு முதலிடம் என்ற பெயரில் முப்படைகளையும் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் புதியபுதிய புத்த விகாரைகளை அமைக்கும் அரசின் செயற்பாடுகள் போன்றவை தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில், சமத்துவமோ, புரிந்துணர்வோ எவ்வாறு ஏற்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.

அது மட்டுமன்றி, இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வளப்படுத்த வேண்டுமாக இருந்தால் அதற்கான சர்வதேச முதலீடுகளை நாங்கள் கொண்டுவர வேண்டுமென நாங்கள் விரும்பினால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று ஏற்பட வேண்டும். அந்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால், நீண்டகாலமாக இழுபறி பட்டுக்கொண்டிருக்கும்

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குக் கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும். இவை இல்லாமல் பொருளாதார முன்னேற்றங்களோ அபிவிருத்தியோ ஏற்படுவது மிகக்கடினமான ஒரு செயற்பாடாகும்.

மார்க்சிய லெனினிய சிந்தனையில் வளர்ந்து வந்துள்ள நீங்கள் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையையும் அவர்கள் சுயாச்சியுடன் வாழ்வதற்கான அடிப்படைகளையும் மற்றவர்களைவிட தெளிவாகப் புரிந்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம். ஆகவே, அந்தவகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஜனநாயக ரீதியில் முதன்முறையாக ஒரு இடதுசாரிக் கட்சியாக நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கின்றீர்கள். ஆகவே, அந்தவகையில் நீண்டகாலமாக இழுபறிபட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீங்கள்தான் தகுதிவாய்ந்தவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

உங்கள் முயற்சிகளும் சிந்தனைகளும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்." - என்றுள்ளது.

அநுரவின் வெற்றி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரட்டும் - வாழ்த்துச் செய்தியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திஸாநாயக்க புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டு நாட்டை சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் முன்கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இடதுசாரித் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் முதன்முறையாக மார்க்சிய லெனினிய சிந்தனையைக் கொண்ட இடதுசாரிக் கட்சியொன்றின் தலைவர் மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். 56 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தோழர் அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றுள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் எமது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். ஒருபுறம் பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள நாடு. இலஞ்சம் ஊழல். மறுபுறம் முப்பது வருடங்களாக நடைபெற்ற பாரிய யுத்தம். இதனால் ஏற்பட்ட இழப்புகளும் பொருளாதார அழிவுகளும் இவை அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டிய ஒரு பொறுப்பிலும் நீங்கள் இருக்கின்றீர்கள்.இன, மத பேதமில்லாமல் நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற வகையில் நாம் செயற்பட வேண்டும் என்றும் நீங்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், இந்த நாடு நூற்றாண்டு காலமாக இன, மத, மொழி ரீதியாக பிரிந்து போயிருக்கின்றது. பௌத்தத்திற்கு முதலிடம், சிங்களத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து, பௌத்தத்திற்கு முதலிடம் என்ற பெயரில் முப்படைகளையும் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் புதியபுதிய புத்த விகாரைகளை அமைக்கும் அரசின் செயற்பாடுகள் போன்றவை தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில், சமத்துவமோ, புரிந்துணர்வோ எவ்வாறு ஏற்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.அது மட்டுமன்றி, இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வளப்படுத்த வேண்டுமாக இருந்தால் அதற்கான சர்வதேச முதலீடுகளை நாங்கள் கொண்டுவர வேண்டுமென நாங்கள் விரும்பினால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று ஏற்பட வேண்டும். அந்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால், நீண்டகாலமாக இழுபறி பட்டுக்கொண்டிருக்கும்தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குக் கௌரவமான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும். இவை இல்லாமல் பொருளாதார முன்னேற்றங்களோ அபிவிருத்தியோ ஏற்படுவது மிகக்கடினமான ஒரு செயற்பாடாகும்.மார்க்சிய லெனினிய சிந்தனையில் வளர்ந்து வந்துள்ள நீங்கள் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையையும் அவர்கள் சுயாச்சியுடன் வாழ்வதற்கான அடிப்படைகளையும் மற்றவர்களைவிட தெளிவாகப் புரிந்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம். ஆகவே, அந்தவகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஜனநாயக ரீதியில் முதன்முறையாக ஒரு இடதுசாரிக் கட்சியாக நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கின்றீர்கள். ஆகவே, அந்தவகையில் நீண்டகாலமாக இழுபறிபட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீங்கள்தான் தகுதிவாய்ந்தவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.உங்கள் முயற்சிகளும் சிந்தனைகளும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்." - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement