• Apr 30 2025

ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கு இந்த மேதினம் வழிகோலட்டும்! க.பிரேமச்சந்திரன்

Chithra / Apr 30th 2025, 4:39 pm
image


இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் இந்த மேதினம் வழிகோலட்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தனது மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

மேதினததிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

இலங்கையில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர்களுக்கும் உலகின் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்கும் இலங்கை தமிழ் தேசிய இன மக்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உழைப்பாளர்தின வாழ்த்துகள்.

இலங்கையைப் பொறுத்தவரையில் உழைக்கும் வர்க்கத்தின் காவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜனதா விமுக்தி பெரமுண என்றழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றது. 

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கான இன்னோரன்ன சலுகைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதுடன் நாட்டில் தங்களது ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். 

ஆனால் ஆட்சிப்பீடமேறி அரையாண்டு கடந்த பின்னரும் தோட்டத் தொழிலாளர்கள் எந்த நிவாரணமுற்ற ஏதிலிகளாகவே இன்னமும் இருக்கின்றனர். அதனைப் போலவே தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள தோழர்களுக்கும் எதுவித ஊதிய உயர்வோ பணிப்பாதுகாப்புத் திட்டங்களோ கிடைக்கவில்லை. இந்த இலட்சணத்தில்தான் இலங்கையில் முதலாவதாக ஆட்சிப்பீடமேறிய இடதுசாரி மார்க்சிய லெனினியவாதிகளின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றது.

இந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள்கூட இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. 

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் வடக்கு-கிழக்கிற்கு வரும்பொழுது ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்கிறார்கள். தாங்கள் இனவாதம், மதவாதம், சாதிவாதம் என்பனவற்றிற்கு எதிராக இருப்பதாகவும் ஏதோ தமிழ் மக்கள்தான் அவற்றை உயர்த்திப்பிடிப்பதாகவும் ஒரு பிரமையை உருவாக்கப் பார்க்கிறார்கள். 

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு அடுத்ததாக 1971ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின்போதும் 1988-89 ஜேவிபியின் கிளர்ச்சியின்போதும் தமிழ் மக்களுக்கு விரோதமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைத்து இனவாதிகளாக நடந்துகொண்டவர்களே ஜேவிபி தரப்பினர்.

சிங்கள மக்கள் மத்திதியில் இனவாதத் தீயை உருவாக்கி பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்கி, நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்றொழித்து ஏதிலிகளாக்கி அவர்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்த முழுப்பங்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அவர்களது கூட்டத்தையுமே சாரும்.

தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தேர்தல் வெற்றிகளுக்காக தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறுபட்ட சட்டங்களை உருவாக்கி அதன் மூலம் இனவாதத்தைத் தூண்டி வளர்த்தவர்கள் சிங்கள ஆளும் தரப்பினர். அதில் இன்றுள்ளவர்களும் அடக்கம்.

சிங்கள ஆளும் வர்க்கத்தின் இனவாத செயற்பாடுகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாகவும் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளை வைப்பதானது எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதமாகாது. அதற்காக குரல்கொடுப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ இனவாத செயற்பாடாக அமைய மாட்டாது. 

எனவே, சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத் தீயிலிருந்து சிங்கள மக்களை மீட்டெடுப்பதற்கு ஜேவிபி அவர்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்பதுடன், அதற்கு முன்பாக தாங்கள் விட்ட தவறுகளுக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரி தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். 

தேர்தலில் வெல்வதற்காக மட்டும் தங்களை இன, மத, சாதிபேதமற்றவர்களாகக் காட்டிக்கொள்ள முனைவது வெற்று ஆரவாரக் கூச்சலாக இருக்குமே தவிர, அதில் எந்தவொரு ஆக்கபூர்வமான பொருளும் இருக்காது. தமிழ் மக்களின் ஆதரவுடன் மூன்றிலரண்டு பெரும்பான்மையுடன் வென்று வந்திருக்கின்றவர்கள் இப்பொழுதாவது தங்களை சுயவிமர்சனம் செய்து திருத்திக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் அவர்கள் திருந்த மாட்டார்கள்.

நாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்தவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்தினரே. எனவே அவர்கள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் முன்வைக்க வேண்டும். அதற்கு தாங்கள் இதுவரைகாலமும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தூண்டிவிடட இனவாதக் கருத்துகளுக்கு மன்னிப்பு கோருவதுடன், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்குத் தாங்களே காரணம் என்பதை மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொண்டு இனி ஒருபோதும் அத்தகைய தவறுகள் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை அளித்து இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சிங்கள தலைமைகளின் தலையாய கடமையாகும்.

இந்த மேதினம் என்பது உழைக்கும் வர்க்கம் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உந்துசக்தியாக இருக்கட்டும் என்பதுடன் ஜேவிபி போன்றோர் தம்மை சுயவிமர்சனம் செய்து சீர்திருத்திக்கொள்ளவும் உகந்ததாக இருக்கட்டும்.

ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கு இந்த மேதினம் வழிகோலட்டும் க.பிரேமச்சந்திரன் இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் இந்த மேதினம் வழிகோலட்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தனது மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.மேதினததிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:இலங்கையில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர்களுக்கும் உலகின் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்கும் இலங்கை தமிழ் தேசிய இன மக்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உழைப்பாளர்தின வாழ்த்துகள்.இலங்கையைப் பொறுத்தவரையில் உழைக்கும் வர்க்கத்தின் காவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜனதா விமுக்தி பெரமுண என்றழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றது. அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கான இன்னோரன்ன சலுகைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதுடன் நாட்டில் தங்களது ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிப்பீடமேறி அரையாண்டு கடந்த பின்னரும் தோட்டத் தொழிலாளர்கள் எந்த நிவாரணமுற்ற ஏதிலிகளாகவே இன்னமும் இருக்கின்றனர். அதனைப் போலவே தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள தோழர்களுக்கும் எதுவித ஊதிய உயர்வோ பணிப்பாதுகாப்புத் திட்டங்களோ கிடைக்கவில்லை. இந்த இலட்சணத்தில்தான் இலங்கையில் முதலாவதாக ஆட்சிப்பீடமேறிய இடதுசாரி மார்க்சிய லெனினியவாதிகளின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றது.இந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள்கூட இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் அனைவரும் வடக்கு-கிழக்கிற்கு வரும்பொழுது ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்கிறார்கள். தாங்கள் இனவாதம், மதவாதம், சாதிவாதம் என்பனவற்றிற்கு எதிராக இருப்பதாகவும் ஏதோ தமிழ் மக்கள்தான் அவற்றை உயர்த்திப்பிடிப்பதாகவும் ஒரு பிரமையை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு அடுத்ததாக 1971ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின்போதும் 1988-89 ஜேவிபியின் கிளர்ச்சியின்போதும் தமிழ் மக்களுக்கு விரோதமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைத்து இனவாதிகளாக நடந்துகொண்டவர்களே ஜேவிபி தரப்பினர்.சிங்கள மக்கள் மத்திதியில் இனவாதத் தீயை உருவாக்கி பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்கி, நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் அவர்களைக் கொன்றொழித்து ஏதிலிகளாக்கி அவர்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்த முழுப்பங்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அவர்களது கூட்டத்தையுமே சாரும்.தங்களது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தேர்தல் வெற்றிகளுக்காக தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறுபட்ட சட்டங்களை உருவாக்கி அதன் மூலம் இனவாதத்தைத் தூண்டி வளர்த்தவர்கள் சிங்கள ஆளும் தரப்பினர். அதில் இன்றுள்ளவர்களும் அடக்கம்.சிங்கள ஆளும் வர்க்கத்தின் இனவாத செயற்பாடுகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாகவும் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளை வைப்பதானது எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதமாகாது. அதற்காக குரல்கொடுப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ இனவாத செயற்பாடாக அமைய மாட்டாது. எனவே, சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இனவாதத் தீயிலிருந்து சிங்கள மக்களை மீட்டெடுப்பதற்கு ஜேவிபி அவர்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்பதுடன், அதற்கு முன்பாக தாங்கள் விட்ட தவறுகளுக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரி தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். தேர்தலில் வெல்வதற்காக மட்டும் தங்களை இன, மத, சாதிபேதமற்றவர்களாகக் காட்டிக்கொள்ள முனைவது வெற்று ஆரவாரக் கூச்சலாக இருக்குமே தவிர, அதில் எந்தவொரு ஆக்கபூர்வமான பொருளும் இருக்காது. தமிழ் மக்களின் ஆதரவுடன் மூன்றிலரண்டு பெரும்பான்மையுடன் வென்று வந்திருக்கின்றவர்கள் இப்பொழுதாவது தங்களை சுயவிமர்சனம் செய்து திருத்திக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் அவர்கள் திருந்த மாட்டார்கள்.நாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்தவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்தினரே. எனவே அவர்கள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் முன்வைக்க வேண்டும். அதற்கு தாங்கள் இதுவரைகாலமும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தூண்டிவிடட இனவாதக் கருத்துகளுக்கு மன்னிப்பு கோருவதுடன், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்குத் தாங்களே காரணம் என்பதை மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொண்டு இனி ஒருபோதும் அத்தகைய தவறுகள் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை அளித்து இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சிங்கள தலைமைகளின் தலையாய கடமையாகும்.இந்த மேதினம் என்பது உழைக்கும் வர்க்கம் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உந்துசக்தியாக இருக்கட்டும் என்பதுடன் ஜேவிபி போன்றோர் தம்மை சுயவிமர்சனம் செய்து சீர்திருத்திக்கொள்ளவும் உகந்ததாக இருக்கட்டும்.

Advertisement

Advertisement

Advertisement