• Jan 22 2025

மலையக மக்களின் எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையட்டும் - இராதா எம்.பி வாழ்த்துச் செய்தி

Chithra / Dec 31st 2024, 2:39 pm
image

   

புதிய நம்பிக்கைகளுடன் மலர்கின்ற இந்த புத்தாண்டில் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையக மக்களின் நலன் கருதி புதிய அரசாங்கத்துடன், புதிய பாதையில் அணைவரும் ஓரணியில் பயணிப்போம்.

மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் .

அத்தோடு, மலையக மக்களின் எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையும் இனிய வருடமாக மாறும்.

மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியை தரும் ஆண்டாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மலையக மக்களின் எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையட்டும் - இராதா எம்.பி வாழ்த்துச் செய்தி    புதிய நம்பிக்கைகளுடன் மலர்கின்ற இந்த புத்தாண்டில் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,மலையக மக்களின் நலன் கருதி புதிய அரசாங்கத்துடன், புதிய பாதையில் அணைவரும் ஓரணியில் பயணிப்போம்.மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் .அத்தோடு, மலையக மக்களின் எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையும் இனிய வருடமாக மாறும்.மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியை தரும் ஆண்டாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement