• Oct 02 2024

சிறுவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு- வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Mar 22nd 2023, 6:31 am
image

Advertisement

வைரஸ் காய்ச்சல், இருமல், போலியோ போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருக்கும் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மழையுடன் கூடிய காலநிலையுடன் பாடசாலை மாணவர்களுக்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல், சளி, வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் சிறுவர்கள் வாய் முகமூடிகளை அணிவது கட்டாயம் எனவும், சரியான அளவு பராசிட்டமோல், இயற்கையான திரவ உணவு மற்றும் ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம் எனவும் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.



மேலும் சில நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அது டெங்கு அல்லது கொவிட் நோயின் ஆரம்பமாக இருக்கலாம் எனவே உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.


சிறுவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு- வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை SamugamMedia வைரஸ் காய்ச்சல், இருமல், போலியோ போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருக்கும் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மழையுடன் கூடிய காலநிலையுடன் பாடசாலை மாணவர்களுக்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல், சளி, வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் சிறுவர்கள் வாய் முகமூடிகளை அணிவது கட்டாயம் எனவும், சரியான அளவு பராசிட்டமோல், இயற்கையான திரவ உணவு மற்றும் ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம் எனவும் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.மேலும் சில நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அது டெங்கு அல்லது கொவிட் நோயின் ஆரம்பமாக இருக்கலாம் எனவே உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement