• May 14 2025

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது..!

Sharmi / May 13th 2025, 9:02 pm
image

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் தம்பஹிட்டிய பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி  மீட்டியகொட பொலிஸ் பிரிவின் தம்பஹிட்டிய பகுதியில் இரண்டு பேர் T56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அத்துடன் இந்த சம்பவம் தொடர்ப்பில் மீட்டியாகொட பொலிஸாரும் காலி மாவட்ட குற்றப்பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

அதன்படி, இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக நேற்று முன்தினம் இரவு படபொல பொலிஸ் பிரிவின் நிந்தான பகுதியில் காலி மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிந்தான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது. மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் தம்பஹிட்டிய பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம் திகதி  மீட்டியகொட பொலிஸ் பிரிவின் தம்பஹிட்டிய பகுதியில் இரண்டு பேர் T56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்ப்பில் மீட்டியாகொட பொலிஸாரும் காலி மாவட்ட குற்றப்பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக நேற்று முன்தினம் இரவு படபொல பொலிஸ் பிரிவின் நிந்தான பகுதியில் காலி மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிந்தான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement