• Jan 13 2025

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு; கிளிநொச்சியில் துயரம்..!

Sharmi / Jan 4th 2025, 9:11 am
image

கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி - கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த நபர், காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும் அவரது செருப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபரை முறிப்பு குளத்தில் தேடும் பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் நேற்றையதினம் அவரது சடலம் மீட்கப்படவில்லை. இந்நிலையில் இன்றையதினம்  முறிப்பு  குளத்தில் மிதந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு; கிளிநொச்சியில் துயரம். கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி - கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த நபர், காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும் அவரது செருப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த நபரை முறிப்பு குளத்தில் தேடும் பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் நேற்றையதினம் அவரது சடலம் மீட்கப்படவில்லை. இந்நிலையில் இன்றையதினம்  முறிப்பு  குளத்தில் மிதந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement