• Sep 21 2024

நவீன டிஜிட்டலில் வெளிவரும் எம்.ஜி.ஆரின் திரைப்படம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Sharmi / Dec 21st 2022, 5:00 pm
image

Advertisement

எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தையும் பிலிமில் இருந்து நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி அடுத்த மாதம் (ஜனவரி) தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்து 1960 மற்றும் 70-களில் பரபரப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘ஆயிரத்தில் ஒருவன், ரிக்‌ஷாக்காரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண்’ உள்ளிட்ட சில படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தையும் பிலிமில் இருந்து நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி அடுத்த மாதம் (ஜனவரி) தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த படம் 1974-ல் வெளியானது. இதில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். லதா நாயகியாக வந்தார். படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான், ‘ ‘பொன்மன செம்மலை புண்படச் செய்தது யாரோ’, ‘கொஞ்ச நேரம், ‘ ‘உலகம் எனும் நாடக மேடையில்’ உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

இந்த படத்தை எஸ்.எஸ்.பாலன் டைரக்டு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.


நவீன டிஜிட்டலில் வெளிவரும் எம்.ஜி.ஆரின் திரைப்படம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள் எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தையும் பிலிமில் இருந்து நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி அடுத்த மாதம் (ஜனவரி) தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.எம்.ஜி.ஆர். நடித்து 1960 மற்றும் 70-களில் பரபரப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘ஆயிரத்தில் ஒருவன், ரிக்‌ஷாக்காரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண்’ உள்ளிட்ட சில படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டன.இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தையும் பிலிமில் இருந்து நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி அடுத்த மாதம் (ஜனவரி) தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.இந்த படம் 1974-ல் வெளியானது. இதில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். லதா நாயகியாக வந்தார். படத்தில் இடம்பெற்ற ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான், ‘ ‘பொன்மன செம்மலை புண்படச் செய்தது யாரோ’, ‘கொஞ்ச நேரம், ‘ ‘உலகம் எனும் நாடக மேடையில்’ உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்தை எஸ்.எஸ்.பாலன் டைரக்டு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement