• May 11 2025

கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரி மற்றும் இளைஞன் கைது! முல்லைத்தீவில் சம்பவம்

Chithra / Mar 10th 2024, 1:07 pm
image


 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின் போது 10 கிராம் கஞ்சாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன் மேஜரும்,

உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது இருவரிடமும் போதை பாவனை உறுதி செய்யப்பட்டது.

குறித்த இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரி மற்றும் இளைஞன் கைது முல்லைத்தீவில் சம்பவம்  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின் போது 10 கிராம் கஞ்சாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன் மேஜரும்,உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு கைது செய்துள்ளனர்.குறித்த இருவரையும் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது இருவரிடமும் போதை பாவனை உறுதி செய்யப்பட்டது.குறித்த இருவரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now