• Nov 15 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி – அறிக்கையில் அதிர்ச்சி

Chithra / Jul 30th 2024, 1:01 pm
image

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை மோசடிகளை குறைப்பதற்காக தானியங்கி கதவுகளை திறக்கும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி – அறிக்கையில் அதிர்ச்சி  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளதுதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.இதேவேளை மோசடிகளை குறைப்பதற்காக தானியங்கி கதவுகளை திறக்கும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement