• May 17 2024

அரச ஊழியர்களுக்கு அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு..! 8,400 பணியாளர்கள் நிரந்தர நியமனம்..!! samugammedia

Chithra / Nov 3rd 2023, 8:17 am
image

Advertisement

மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய, சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8 ஆயிரத்து 400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 36 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணிகளை ஒன்றரை ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றோம்.

வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணி நிறைவடைந்துள்ளன.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

எஞ்சிய 6 மாகாணங்களுக்கான காலவரையறையை தயாரித்து பயிற்சிகளை வழங்கி 2024 ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.

எமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைக்கு ஒன்பது பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.


அரச ஊழியர்களுக்கு அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு. 8,400 பணியாளர்கள் நிரந்தர நியமனம். samugammedia மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய, சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8 ஆயிரத்து 400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.கடந்த 36 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணிகளை ஒன்றரை ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றோம்.வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணி நிறைவடைந்துள்ளன.எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.எஞ்சிய 6 மாகாணங்களுக்கான காலவரையறையை தயாரித்து பயிற்சிகளை வழங்கி 2024 ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.எமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைக்கு ஒன்பது பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement