• Feb 06 2025

ரயில் சேவையை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் - அமைச்சர் அறிவிப்பு

Chithra / Dec 13th 2024, 11:10 am
image

 

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக தெரிவித்தார்.


இதேவேளை, ரயில் தாமதம் மற்றும் ரயில் கோளாறுகளை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவையை அபிவிருத்தி செய்வதற்கு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மருதானை ரயில் நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று கொழும்பு துறைமுகத்தில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்தார்.

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதிக்குள் தயார் செய்து முடிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என்றார்.

ரயில் சேவையை மேம்படுத்த பல புதிய திட்டங்கள் - அமைச்சர் அறிவிப்பு  ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக தெரிவித்தார்.இதேவேளை, ரயில் தாமதம் மற்றும் ரயில் கோளாறுகளை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் சேவையை அபிவிருத்தி செய்வதற்கு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.மருதானை ரயில் நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.இதேவேளை, அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று கொழும்பு துறைமுகத்தில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டிருந்தார்.துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதிக்குள் தயார் செய்து முடிக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய இலக்கு என்றார்.

Advertisement

Advertisement

Advertisement