• Nov 23 2024

நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ஜீவன் – நீதிபதி அதிரடி உத்தரவு

Chithra / Jul 29th 2024, 5:35 pm
image

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன், அந்த கட்சியின் சிரேஷ்ட மூன்று தலைவர்களும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முன்னிலையாகியுள்ளனர்.

களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரது சகாக்களுக்கு எதிராக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையிட்டு கடந்த 22ம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நீதிபதி ஜயமினி அம்பகஹவத்தவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நிறைவடையாதமையினால் சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை எனவும் நுவரெலியா பொலிஸார் கடந்த 22ம் திகதி நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

எனினும், சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்திற்கு முன்வைத்த பெருந்தோட்ட நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சுமத்தியிருந்தார்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் S.சக்திவேல், அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லோகதாஸ் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யோகநாதன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பொலிஸாரினால் பெயரிடப்படாமையினால், இந்த வழக்கை எதிர்வரும் மாதம் 26ம் திகதி எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ஜீவன் – நீதிபதி அதிரடி உத்தரவு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன், அந்த கட்சியின் சிரேஷ்ட மூன்று தலைவர்களும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முன்னிலையாகியுள்ளனர்.களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரது சகாக்களுக்கு எதிராக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையிட்டு கடந்த 22ம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நீதிபதி ஜயமினி அம்பகஹவத்தவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த முறைப்பாடு தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நிறைவடையாதமையினால் சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை எனவும் நுவரெலியா பொலிஸார் கடந்த 22ம் திகதி நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.எனினும், சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்திற்கு முன்வைத்த பெருந்தோட்ட நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சுமத்தியிருந்தார்.குறித்த சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் S.சக்திவேல், அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லோகதாஸ் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யோகநாதன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பொலிஸாரினால் பெயரிடப்படாமையினால், இந்த வழக்கை எதிர்வரும் மாதம் 26ம் திகதி எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement