சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களுடனான சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை திருகோணமலையிலுள்ள ரிங்கோ ரெஸ்ட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட அரச உத்தியோகத்தர்களும், சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன் போது வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெரிவித்ததோடு மக்களுடைய குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்கின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், புணர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் திருகோணமலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் சந்திப்பு சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களுடனான சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை திருகோணமலையிலுள்ள ரிங்கோ ரெஸ்ட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட அரச உத்தியோகத்தர்களும், சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.இதன் போது வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெரிவித்ததோடு மக்களுடைய குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்கின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், புணர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் திருகோணமலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.