• Jan 11 2025

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு - சபையில் காரசார விவாதம்

Chithra / Jan 10th 2025, 8:12 am
image

 

இரண்டு, மூன்று நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். 

பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் கடுமையாக சாடினார்.

இதற்கு  பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, 

கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி மின் கட்டணத்தை குறைக்க முடியாது.

நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதை விட ஒரு மின் அலகுக்கு வாரியம் அதிக பணத்தை செலவிடுகிறது.

மின்சாரக் கட்டணத்தை 37 வீதத்தால் அதிகரிக்க மின்சார சபை அண்மையில் முன்மொழிந்திருந்த போதிலும், கட்டணத்தை அதிகரிக்காமல் அரசாங்கம் சமாளித்து வருகின்றது. 

3 வருட காலத்துக்குள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், மின்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு - சபையில் காரசார விவாதம்  இரண்டு, மூன்று நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம். இதனால் தான் இந்த அரசாங்கத்தை பொய்யர்களின் அரசாங்கம் என்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர்  தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் கடுமையாக சாடினார்.இதற்கு  பதிலளித்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி மின் கட்டணத்தை குறைக்க முடியாது.நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதை விட ஒரு மின் அலகுக்கு வாரியம் அதிக பணத்தை செலவிடுகிறது.மின்சாரக் கட்டணத்தை 37 வீதத்தால் அதிகரிக்க மின்சார சபை அண்மையில் முன்மொழிந்திருந்த போதிலும், கட்டணத்தை அதிகரிக்காமல் அரசாங்கம் சமாளித்து வருகின்றது. 3 வருட காலத்துக்குள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், மின்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement