• Nov 28 2024

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Oct 29th 2024, 1:12 pm
image

 

புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது தொடர்பான விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அது தொடர்ந்தும் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மாத்திரமே மாற்றங்களைச் செய்ய முடியும் என்றார்.

எவ்வாறெனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.

புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் அரசாங்கம் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு  புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது தொடர்பான விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அது தொடர்ந்தும் இயங்கும் எனவும் தெரிவித்தார்.தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மாத்திரமே மாற்றங்களைச் செய்ய முடியும் என்றார்.எவ்வாறெனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் அரசாங்கம் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement