• May 20 2024

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சரின் அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Oct 3rd 2023, 9:14 am
image

Advertisement



அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும், நோயாளர்களின் எண்ணிக்கை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளை மக்கள் நாடுகின்றனர்.

கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகள் தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், அரச வைத்தியசாலைகளின் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும், நோயாளர்களின் எண்ணிக்கை 42 வீதத்தால் அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் சில வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சரின் அதிர்ச்சித் தகவல் samugammedia அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும், நோயாளர்களின் எண்ணிக்கை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம் காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளை மக்கள் நாடுகின்றனர்.கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகள் தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.எனினும், அரச வைத்தியசாலைகளின் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும், நோயாளர்களின் எண்ணிக்கை 42 வீதத்தால் அதிகரித்துள்ளது.வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் சில வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement