• Apr 01 2025

புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் - வழிகாட்டுதல் தொகுப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சு

Chithra / Mar 30th 2025, 11:25 am
image


பண்டிகைக் காலத்தில் இலங்கையில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் கடுமையான சுகாதார நிலைமைகளைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு இந்த பொதுவான வழிகாட்டுதல் தொகுப்பை முன்வைத்துள்ளது.   

குறிப்பாக, கிராமத்தைச் சுற்றி ஓடுதல், மராத்தான் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நீண்ட நேரம் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள், போட்டிக்கு குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு முன்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அடையாளம் காணப்பட்ட நோய் நிலைமைகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள், தங்கள் வழக்கமான சுகாதார சேவை வழங்குநரிடமிருந்து அந்த விளையாட்டு நிகழ்வில் பங்கேற்க தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தும் வைத்திய அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் - வழிகாட்டுதல் தொகுப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சு பண்டிகைக் காலத்தில் இலங்கையில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் கடுமையான சுகாதார நிலைமைகளைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு இந்த பொதுவான வழிகாட்டுதல் தொகுப்பை முன்வைத்துள்ளது.   குறிப்பாக, கிராமத்தைச் சுற்றி ஓடுதல், மராத்தான் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நீண்ட நேரம் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள், போட்டிக்கு குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு முன்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அடையாளம் காணப்பட்ட நோய் நிலைமைகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள், தங்கள் வழக்கமான சுகாதார சேவை வழங்குநரிடமிருந்து அந்த விளையாட்டு நிகழ்வில் பங்கேற்க தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்தும் வைத்திய அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement