• Nov 25 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் முல்லைத்தீவில் நடமாடும் சேவை..!!

Tamil nila / May 3rd 2024, 7:13 pm
image

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -சிமாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான  நடமாடும் சேவை ஒன்று இன்று (03) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார அவர்களும் , இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் வடமாகாண பிரதம செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கட்டுமானத்துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புகளோடு மேலும் பல சேவைகளை பற்றி கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்றும் நாளையுமாக இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

தெளிவூட்டல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், உத்தேச தொழில்வாய்ப்புகள், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ருமேனியா, மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.




தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் முல்லைத்தீவில் நடமாடும் சேவை. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 'நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா -சிமாட் சூரன்களோடு' எனும் தொனிப்பொருளிலான  நடமாடும் சேவை ஒன்று இன்று (03) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார அவர்களும் , இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் வடமாகாண பிரதம செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கட்டுமானத்துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்புகளோடு மேலும் பல சேவைகளை பற்றி கலந்துரையாடப்பட்டது.குறித்த நிகழ்வானது இன்றும் நாளையுமாக இரு தினங்களில் நடைபெறவுள்ளது.தெளிவூட்டல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், உத்தேச தொழில்வாய்ப்புகள், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும் ருமேனியா, மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல், ஐரோப்பா நாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால் தெளிவூட்டல்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement