புதுமுறிப்பு குளத்தில் சிறு கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகி வருகின்றது.
தொடர் மழை காரணமாக குளக்கட்டில் கசிவு தொடர்பில் அவதானிக்கப்பட்டு, நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலை ஏற்படாத நிலையை அவதானித்த பொறியியலாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, நாளை காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அச்சப்படுமளவிற்கு அபாயமான நிலை ஏற்படவில்லை எனவும், வெள்ள அனர்த்தம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
புது முறிப்பு குளத்தில் ஏற்பட்ட சிறு கசிவு - இடர் முகாமைத்துவ பிரிவு அறிவித்தல். samugammedia புதுமுறிப்பு குளத்தில் சிறு கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகி வருகின்றது.தொடர் மழை காரணமாக குளக்கட்டில் கசிவு தொடர்பில் அவதானிக்கப்பட்டு, நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.ஆபத்தான நிலை ஏற்படாத நிலையை அவதானித்த பொறியியலாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து, நாளை காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மக்கள் அச்சப்படுமளவிற்கு அபாயமான நிலை ஏற்படவில்லை எனவும், வெள்ள அனர்த்தம் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.