• Nov 24 2024

சிறுபான்மையினரின் வாக்குகள் சஜித் பிரேமதாசாவின் வெற்றியை தீர்மானிக்கும்..!

Sharmi / Sep 12th 2024, 10:15 am
image

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்ஷர்களுடன் சேர்ந்து பயணித்த நாங்கள், அவர்களிடமிருந்து பல ஏமாற்றங்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்ததனால், தற்போது  புதிய பாதையை தெரிவு செய்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாஸ்ரீ அணியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயல்படலாம் என சட்டபூர்வமான அனுமதி எங்கள் பிரிவுக்கே  கிடைத்திருக்கிறது. 

இதன் காரணமாக, இப்போது தயாஸ்ரீ தலைமையில் செயற்பட்டு கொண்டிருக்கிறோம்.

இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று பிரிவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனினும் மற்றைய இரு அணியினரின்  வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே சட்டபூர்வமான அனுமதி எங்களுக்கே உண்டு. 

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேசிய ரீதியில்  28 வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீட்டை  வழங்குவதற்கான ஒப்பந்தத்தை  செய்திருக்கிறோம். 

இந்த ஜனாதிபதி தேர்தல்  அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதானம் 3 வேட்பாளர்கள் தொடர்பாகவும், எமது கட்சி  மூன்று  மாத காலமாக விரிவாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான்  சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்பது.

இதன் பிரகாரம்  தேசிய ரீதியில்  சஜித் பிரேமதாசாவின்  வெற்றிக்காக நாங்கள் உழைத்து வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் கோட்டாபய ராஜபக்சாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரித்து வந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் சஜித் பிரேமதாசாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வீதமாக இருந்தது. ஆனாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அப்போது கோட்டாவுக்கு வழங்கப்பட்ட  69 லட்சம்  பெரும்பான்மையின தென்னிலங்கை  வாக்குகளும் இம்முறை பல வேட்பாளர்களுக்கு பிரிவதனால், திருகோணமலை மாவட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் சஜித் பிரேமதாசாவின் வெற்றியை தீர்மானிக்கும்  சக்தியாக இருக்கும் என நினைக்கிறேன். 

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் ஏற்பட்ட பலவீனமான நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக சகல துறைகளிலும்   தொய்வுகள், நெருக்கடிகள்  ஆரம்பித்தன. இந்த நிலை புதிய மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றது. அந்த மாற்றத்தில் நாங்களும் பங்காளிகளாக இருப்பதைக்குயிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் தெரிவித்தார். 

சிறுபான்மையினரின் வாக்குகள் சஜித் பிரேமதாசாவின் வெற்றியை தீர்மானிக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்ஷர்களுடன் சேர்ந்து பயணித்த நாங்கள், அவர்களிடமிருந்து பல ஏமாற்றங்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்ததனால், தற்போது  புதிய பாதையை தெரிவு செய்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாஸ்ரீ அணியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.கிண்ணியாவில் நேற்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக செயல்படலாம் என சட்டபூர்வமான அனுமதி எங்கள் பிரிவுக்கே  கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக, இப்போது தயாஸ்ரீ தலைமையில் செயற்பட்டு கொண்டிருக்கிறோம்.இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று பிரிவில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.எனினும் மற்றைய இரு அணியினரின்  வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே சட்டபூர்வமான அனுமதி எங்களுக்கே உண்டு. ஜனாதிபதித் தேர்தலை அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேசிய ரீதியில்  28 வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீட்டை  வழங்குவதற்கான ஒப்பந்தத்தை  செய்திருக்கிறோம். இந்த ஜனாதிபதி தேர்தல்  அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பிரதானம் 3 வேட்பாளர்கள் தொடர்பாகவும், எமது கட்சி  மூன்று  மாத காலமாக விரிவாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான்  சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்பது.இதன் பிரகாரம்  தேசிய ரீதியில்  சஜித் பிரேமதாசாவின்  வெற்றிக்காக நாங்கள் உழைத்து வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் கோட்டாபய ராஜபக்சாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரித்து வந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் சஜித் பிரேமதாசாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வீதமாக இருந்தது. ஆனாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை.அப்போது கோட்டாவுக்கு வழங்கப்பட்ட  69 லட்சம்  பெரும்பான்மையின தென்னிலங்கை  வாக்குகளும் இம்முறை பல வேட்பாளர்களுக்கு பிரிவதனால், திருகோணமலை மாவட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் சஜித் பிரேமதாசாவின் வெற்றியை தீர்மானிக்கும்  சக்தியாக இருக்கும் என நினைக்கிறேன். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் ஏற்பட்ட பலவீனமான நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக சகல துறைகளிலும்   தொய்வுகள், நெருக்கடிகள்  ஆரம்பித்தன. இந்த நிலை புதிய மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றது. அந்த மாற்றத்தில் நாங்களும் பங்காளிகளாக இருப்பதைக்குயிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement