• Nov 06 2024

வானில் தோன்றவுள்ள அதிசயம்- இன்று முதல் பூமியை சுற்ற வரும் 'இரண்டாம் நிலா!

Tamil nila / Sep 29th 2024, 7:38 am
image

Advertisement

ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.

இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி (செப்டம்பர் 29-ஆம் தேதி) தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது.

அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன.

இந்த நிகழ்வு, இந்த வார இறுதியில் தொடங்கி, இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும்.

வானியலாளர், மற்றும் ‘Awesome Astronomy’ போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முனைவர் ஜெனிபர் மில்லார்ட், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில், இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

"2024 PT5 நமது கிரகத்தின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார்.

வானில் தோன்றவுள்ள அதிசயம்- இன்று முதல் பூமியை சுற்ற வரும் 'இரண்டாம் நிலா ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி (செப்டம்பர் 29-ஆம் தேதி) தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும்.துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது.அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன.இந்த நிகழ்வு, இந்த வார இறுதியில் தொடங்கி, இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும்.வானியலாளர், மற்றும் ‘Awesome Astronomy’ போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முனைவர் ஜெனிபர் மில்லார்ட், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில், இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்."2024 PT5 நமது கிரகத்தின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement