• Sep 20 2024

தொல்லியல் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள்..!ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்த உதவிப் பணிப்பாளர்..! samugammedia

Sharmi / Jul 17th 2023, 3:08 pm
image

Advertisement

நல்லூர் இராசதானிப் பிரதேசத்தில் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கும்  புனித நிகழ்வொன்றில் கலந்துகொண்டதை வாழ்க்கையின் பொக்கிசமாகவே கருதிக்கொள்கின்றேன். இது எல்லாச் சமூகத்தினருக்கும் மகிழ்வான நிகழ்வாகும் என தொல்பொருட் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பந்துலஜீவ தெரிவித்தார்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் நேற்றையதினம் மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வரலாற்றை வெளிப்படுத்துவதற்கு ஆதாரங்கள் அவசியமானதாகும்.  அதற்கான சின்னங்களையே தொல்லியற் சின்னங்களென்றும் தொல்லியல் மரபுரிமைகளென்றும் நாங்கள் அறிவிக்கின்றோம்.  அந்த வகையிலே எமது வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றை எடு்த்தியம்பும் வகையிலே பாரம்பரியங்களைப் பாதுகாப்பது அவசியமாகும்.

எமது வாழ்க்கையினையும் முன்னோர்களின் வாழ்க்கையையும வெளிப்படுத்தும்  சாட்சிகளை நாம்  பராமரித்து எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதே தலையாயக் கடமையாகும்.  இக் கடமைகளுக்காக  அரச நிறுவனம் என்ற வகையில் தொல்லியற் திணைக்களமும் பொதுமக்களும்  மரபுரிமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாண அரச தொடர்பான  சங்கிலியன் தோரண வாயில் ,  மந்திரி மனை , சங்கிலியன் அரண்மனை மற்றும் யமுனா ஏரி  ஆகிய சின்னங்கள் காணப்படுகின்றன. இந்தச் சின்னங்களை எதிர்காலச் சந்ததிக்குப்  பாதுகாத்து வழங்க வேண்டும்.

அந்த வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் சங்கிலியன் தோரண வாயிலைப் புனரமைக்க உதவிகள் கிடைத்தது.  இதேபோல் ஏனைய சின்னங்களையும் புனரமைக்க எதி்ர்காலத் திட்டங்களைத் தீட்டியுள்ளோம்.

யாழ்ப்பாணத்து அரச காலத்தை வெளிப்படுத்தும் மிக முக்கிய சாட்சியாகக் காணப்படும் மந்திரி மனை அத்தியாவசியமாக மீள் புனரமைக்கவேண்டியுள்ளது. இம் முக்கிய பணிக்கு அனைவரும் இணைந்து பங்களிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

தமிழ் மக்களது பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்திலே உள்ள கௌதாரிமுனை ஆலயமும் மண்ணித்தலை ஆலயமும் அத்தியாவசியமாக புனர்நிர்மாணம் செய்யவேண்டிய நிலையுள்ளது. இது தொடர்பாக இந்தியத் துணைத் தூதுவரின் கோரிக்கைக்கு அமைய திட்ட வரைபு தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொல்லியற் திணைக்களம் மதத்துவம் , இனத்துவம் சார்ந்த நிறுவனமென்று பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது.  ஆனால் நாங்கள் திணைக்களம் என்ற வகையில் வட இலங்கையில் காணப்படும் மரபுரிமைச் சின்னங்களைப்  பாதுகாப்பதற்கான பல்வேறு பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

இந்த இணைந்த பணியின் காரணமாகவே சங்கிலியன் தோரண வாயில் மீள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிலே யாழ்ப்பாண மரபுரிமை மையமே முழுமையாகப் பங்குபற்றியிருந்தது.

இந்தப் பணிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  யாழ்ப்பாண  தொல்லியற் திணைக்கள அலுவலகம் உங்களுடன் இணைந்த நிறுவனம் என்ற எண்ணப்பாட்டுடன்  இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

தொல்லியல் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள்.ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு விடுத்த உதவிப் பணிப்பாளர். samugammedia நல்லூர் இராசதானிப் பிரதேசத்தில் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கும்  புனித நிகழ்வொன்றில் கலந்துகொண்டதை வாழ்க்கையின் பொக்கிசமாகவே கருதிக்கொள்கின்றேன். இது எல்லாச் சமூகத்தினருக்கும் மகிழ்வான நிகழ்வாகும் என தொல்பொருட் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பந்துலஜீவ தெரிவித்தார்.நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் நேற்றையதினம் மாலை திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,வரலாற்றை வெளிப்படுத்துவதற்கு ஆதாரங்கள் அவசியமானதாகும்.  அதற்கான சின்னங்களையே தொல்லியற் சின்னங்களென்றும் தொல்லியல் மரபுரிமைகளென்றும் நாங்கள் அறிவிக்கின்றோம்.  அந்த வகையிலே எமது வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றை எடு்த்தியம்பும் வகையிலே பாரம்பரியங்களைப் பாதுகாப்பது அவசியமாகும்.எமது வாழ்க்கையினையும் முன்னோர்களின் வாழ்க்கையையும வெளிப்படுத்தும்  சாட்சிகளை நாம்  பராமரித்து எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதே தலையாயக் கடமையாகும்.  இக் கடமைகளுக்காக  அரச நிறுவனம் என்ற வகையில் தொல்லியற் திணைக்களமும் பொதுமக்களும்  மரபுரிமையைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.யாழ்ப்பாண அரச தொடர்பான  சங்கிலியன் தோரண வாயில் ,  மந்திரி மனை , சங்கிலியன் அரண்மனை மற்றும் யமுனா ஏரி  ஆகிய சின்னங்கள் காணப்படுகின்றன. இந்தச் சின்னங்களை எதிர்காலச் சந்ததிக்குப்  பாதுகாத்து வழங்க வேண்டும்.அந்த வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் சங்கிலியன் தோரண வாயிலைப் புனரமைக்க உதவிகள் கிடைத்தது.  இதேபோல் ஏனைய சின்னங்களையும் புனரமைக்க எதி்ர்காலத் திட்டங்களைத் தீட்டியுள்ளோம்.யாழ்ப்பாணத்து அரச காலத்தை வெளிப்படுத்தும் மிக முக்கிய சாட்சியாகக் காணப்படும் மந்திரி மனை அத்தியாவசியமாக மீள் புனரமைக்கவேண்டியுள்ளது. இம் முக்கிய பணிக்கு அனைவரும் இணைந்து பங்களிக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.தமிழ் மக்களது பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்திலே உள்ள கௌதாரிமுனை ஆலயமும் மண்ணித்தலை ஆலயமும் அத்தியாவசியமாக புனர்நிர்மாணம் செய்யவேண்டிய நிலையுள்ளது. இது தொடர்பாக இந்தியத் துணைத் தூதுவரின் கோரிக்கைக்கு அமைய திட்ட வரைபு தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.தொல்லியற் திணைக்களம் மதத்துவம் , இனத்துவம் சார்ந்த நிறுவனமென்று பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது.  ஆனால் நாங்கள் திணைக்களம் என்ற வகையில் வட இலங்கையில் காணப்படும் மரபுரிமைச் சின்னங்களைப்  பாதுகாப்பதற்கான பல்வேறு பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.இந்த இணைந்த பணியின் காரணமாகவே சங்கிலியன் தோரண வாயில் மீள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிலே யாழ்ப்பாண மரபுரிமை மையமே முழுமையாகப் பங்குபற்றியிருந்தது. இந்தப் பணிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  யாழ்ப்பாண  தொல்லியற் திணைக்கள அலுவலகம் உங்களுடன் இணைந்த நிறுவனம் என்ற எண்ணப்பாட்டுடன்  இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement