• Sep 20 2024

எதிர்பார்க்காத நேரத்தில் உக்ரைனுக்குள் சரமாரித் தாக்குதல் - சாரை சாரையாக பாய்ந்த ஏவுகணைகள்!

Tamil nila / Dec 29th 2022, 6:41 pm
image

Advertisement

உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதல் சம்பவம் இன்று வியாழக் கிழமை இடம்பெற்றதாகவும் சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் நிருபர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார்.


உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்கள் கடந்து மந்த நிலையை அடைந்துள்ள போது, யாரும் எதிர்பார்க்காத நேரம் ரஷ்ய இராணுவம் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.


அந்த வகையில் இன்று ரஷ்ய இராணுவம் 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனிய நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.


இதனால் உக்ரைனின் பல நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனுக்குள் நுழைந்த பெரும்பாலான ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


உக்ரைனிய அதிபரின் அலுவலக ஆலோசகர் Oleksiy Arestovych பேஸ்புக்கில் எழுதியுள்ள குறிப்பில், 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பல அலைகளில் உக்ரைனுக்குள் வருகின்றன, மேலும் நாடு முழுவதும் வான் வழி தாக்குதல் எச்சரிக்கைகள் கேட்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலால் கீவ், சைட்டோமிர் மற்றும் ஒடேசாவில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு சாத்தியமான சேதத்தை குறைக்கும் நோக்கில் ஒடெசா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிருபர் மற்றும் அந்நாட்டு ஊடக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.


கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரின் மேயர், ரஷ்ய ஏவுகணைகள் நகரத்தைத் தாக்கி தொடர்ச்சியான வெடிப்புகளை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் இன்றைய ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்பார்க்காத நேரத்தில் உக்ரைனுக்குள் சரமாரித் தாக்குதல் - சாரை சாரையாக பாய்ந்த ஏவுகணைகள் உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் இன்று வியாழக் கிழமை இடம்பெற்றதாகவும் சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் நிருபர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார்.உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்கள் கடந்து மந்த நிலையை அடைந்துள்ள போது, யாரும் எதிர்பார்க்காத நேரம் ரஷ்ய இராணுவம் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில் இன்று ரஷ்ய இராணுவம் 120க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனிய நகரங்கள் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால் உக்ரைனின் பல நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனுக்குள் நுழைந்த பெரும்பாலான ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.உக்ரைனிய அதிபரின் அலுவலக ஆலோசகர் Oleksiy Arestovych பேஸ்புக்கில் எழுதியுள்ள குறிப்பில், 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பல அலைகளில் உக்ரைனுக்குள் வருகின்றன, மேலும் நாடு முழுவதும் வான் வழி தாக்குதல் எச்சரிக்கைகள் கேட்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதலால் கீவ், சைட்டோமிர் மற்றும் ஒடேசாவில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு சாத்தியமான சேதத்தை குறைக்கும் நோக்கில் ஒடெசா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிருபர் மற்றும் அந்நாட்டு ஊடக அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரின் மேயர், ரஷ்ய ஏவுகணைகள் நகரத்தைத் தாக்கி தொடர்ச்சியான வெடிப்புகளை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் இன்றைய ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement