• Sep 29 2024

இலங்கையில் அனர்த்தங்கள் குறித்து அறிவிக்க நவீன தொழில்நுட்ப முறை! samugammedia

Chithra / Apr 26th 2023, 4:15 pm
image

Advertisement

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிப்பதற்காக நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மைய நிலநடுக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அதன் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, இந்த நாட்களில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அனர்த்தங்கள் குறித்து அறிவிக்க நவீன தொழில்நுட்ப முறை samugammedia எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிப்பதற்காக நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அண்மைய நிலநடுக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அதன் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, இந்த நாட்களில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement