வடபுலத்தில் கண்ணிழந்த எவரும் கையேந்தி வாழாது உழைத்து வாழவும், வறிய பார்வையற்றவர்களின் மரணச்சடங்கை ஆடம்பரமின்றி நடாத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கண்ணிழந்தவர்களுக்காக யாழ் விழிப்பலனற்றோர் சங்கத்தின் சிவகுமாரன் மோட்ச நிதியமனது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வெளியான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விழியிழந்தவர்களுக்கு விதி எழுதிய யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் இற்றைக்கு 47 ஆண்டுகளாக கண்ணிழந்தவர்களுக்கான கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், வறுமை ஒழிப்பு, சுயநடமாட்டம், முதியோர் பராமரிப்பு முதலான பன்முகப்பணிகளை ஆற்ற தாங்கள் வழங்கிய நிதிவளம், மனிதவளம், அறிவுவளம் அனைத்திற்கும் நாம் நன்றி கூறுகிறோம். வடபுலத்தில் கண்ணிழந்த எவரும் கையேந்தி வாழாது உழைத்து வாழ வைத்த பெருமையுடைய எமது நிறுவனம் வறிய பார்வையற்றவர்களின் மரணச்சடங்கை ஆடம்பரமின்றி நடாத்தி சுய கௌரவத்தோடு வாழ்ந்த பார்வையற்றவரை கௌரவத்தோடு வழியனுப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எமது ஸ்தாபகர்களில் ஒருவரான இராஜசூரியர் சிவகுமாரன் அவர்களின் பிறந்தநாள் பரிசாக யாழ் விழிப்பலனற்றோர் சங்கத்தின் சிவகுமாரன் மோட்ச நிதியம் ஒன்றை 06.02.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்துள்ளோம். அத்துடன் அவரது நிதி அன்பளிப்பில் யாழ் மக்கள் வங்கிகிளையில் 104200240011261 எனும் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். வைப்புச் செய்த தொகையை எமது Whatsapp/ Viber 0771496392என்ற இலக்கங்களுக்கு பெயர், முகவரி, நிதித் தொகை அல்லது வைப்புச் செய்யப்பட்ட வங்கிப்பற்றுச்சீட்டு என்பவற்றை அனுப்பி வைப்பதன் மூலம் எமது நிறுவன பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள இயலும். என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிதியத்தின் தலைவர் தெரிவிக்கையில்,
விழி இழந்து போன காண்பார்வையற்றவர்கள் சமூகத்தின் ஆரோக்கியமான குறிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக, யாழ் விழிப்புணர்வு அற்ற சமூகத்தை ஸ்தாபித்த அந்த பெரு மனிதர்களின் பெரு விருட்ஷமாக தமது உடைகள், பொருள் ஆவி அனைத்தையும் கண்ணிழந்தவர்களின் கண்ணீர் துடைக்கும் பணிக்கு அர்ப்பணம் செய்தவராக சிவகுமாரன் அவர்கள் எமது பணிகளில் ஒன்றாக சுயகௌரவமாக வாழ்ந்த, கண்பார்வையற்றவர்கள் இறந்து அவர்களது மரணச்சடங்கு இடம்பெற வேண்டும் என்ற பெரிய நோக்கதோடு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு யாழ் விழிப்புணரவற்றோர் சங்கத்தின் சிவகுமாரன் மோட்ச நிதியம் என்ற ஒரு நல்ல நிதியத்தை இன்று அங்குரார்ப்பணம் செய்திருக்கிறார்.
எம் இனிய உறவுகளின் இந்த நிதியம் கண்ணிழந்தவர்களை கௌரவமாக வழியனுப்புவதற்கான நிதியம். இந்த நிதியம் பெருந்தொகை நிதியில் கட்டப்பட்டாலும் பொதுமக்கள், நன்கொடையாளர்கள், தனவந்தர்களாகிய நீங்கள் உங்கள் இறந்துபோன ஆத்மாக்களுக்கு மோட்ச அரச்சனை செய்கின்ற பொழுது நீங்கள் இந்த சிவகுமாரன் மோட்ச நிதியத்துக்கு அன்பளிப்பு செய்து கண்ணிழந்தவர்களின் இந்த கௌரவமான மரணச்சடங்குகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உங்களை அன்பாடு வேண்டுகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.
பார்வையற்றவர்களது இறுதிச்சடங்குகளுக்கு மோட்ச நிதியம் அங்குரார்ப்பணம்.samugammedia வடபுலத்தில் கண்ணிழந்த எவரும் கையேந்தி வாழாது உழைத்து வாழவும், வறிய பார்வையற்றவர்களின் மரணச்சடங்கை ஆடம்பரமின்றி நடாத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கண்ணிழந்தவர்களுக்காக யாழ் விழிப்பலனற்றோர் சங்கத்தின் சிவகுமாரன் மோட்ச நிதியமனது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் வெளியான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விழியிழந்தவர்களுக்கு விதி எழுதிய யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் இற்றைக்கு 47 ஆண்டுகளாக கண்ணிழந்தவர்களுக்கான கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், வறுமை ஒழிப்பு, சுயநடமாட்டம், முதியோர் பராமரிப்பு முதலான பன்முகப்பணிகளை ஆற்ற தாங்கள் வழங்கிய நிதிவளம், மனிதவளம், அறிவுவளம் அனைத்திற்கும் நாம் நன்றி கூறுகிறோம். வடபுலத்தில் கண்ணிழந்த எவரும் கையேந்தி வாழாது உழைத்து வாழ வைத்த பெருமையுடைய எமது நிறுவனம் வறிய பார்வையற்றவர்களின் மரணச்சடங்கை ஆடம்பரமின்றி நடாத்தி சுய கௌரவத்தோடு வாழ்ந்த பார்வையற்றவரை கௌரவத்தோடு வழியனுப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எமது ஸ்தாபகர்களில் ஒருவரான இராஜசூரியர் சிவகுமாரன் அவர்களின் பிறந்தநாள் பரிசாக யாழ் விழிப்பலனற்றோர் சங்கத்தின் சிவகுமாரன் மோட்ச நிதியம் ஒன்றை 06.02.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்துள்ளோம். அத்துடன் அவரது நிதி அன்பளிப்பில் யாழ் மக்கள் வங்கிகிளையில் 104200240011261 எனும் கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். வைப்புச் செய்த தொகையை எமது Whatsapp/ Viber 0771496392என்ற இலக்கங்களுக்கு பெயர், முகவரி, நிதித் தொகை அல்லது வைப்புச் செய்யப்பட்ட வங்கிப்பற்றுச்சீட்டு என்பவற்றை அனுப்பி வைப்பதன் மூலம் எமது நிறுவன பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள இயலும். என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிதியத்தின் தலைவர் தெரிவிக்கையில், விழி இழந்து போன காண்பார்வையற்றவர்கள் சமூகத்தின் ஆரோக்கியமான குறிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக, யாழ் விழிப்புணர்வு அற்ற சமூகத்தை ஸ்தாபித்த அந்த பெரு மனிதர்களின் பெரு விருட்ஷமாக தமது உடைகள், பொருள் ஆவி அனைத்தையும் கண்ணிழந்தவர்களின் கண்ணீர் துடைக்கும் பணிக்கு அர்ப்பணம் செய்தவராக சிவகுமாரன் அவர்கள் எமது பணிகளில் ஒன்றாக சுயகௌரவமாக வாழ்ந்த, கண்பார்வையற்றவர்கள் இறந்து அவர்களது மரணச்சடங்கு இடம்பெற வேண்டும் என்ற பெரிய நோக்கதோடு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு யாழ் விழிப்புணரவற்றோர் சங்கத்தின் சிவகுமாரன் மோட்ச நிதியம் என்ற ஒரு நல்ல நிதியத்தை இன்று அங்குரார்ப்பணம் செய்திருக்கிறார். எம் இனிய உறவுகளின் இந்த நிதியம் கண்ணிழந்தவர்களை கௌரவமாக வழியனுப்புவதற்கான நிதியம். இந்த நிதியம் பெருந்தொகை நிதியில் கட்டப்பட்டாலும் பொதுமக்கள், நன்கொடையாளர்கள், தனவந்தர்களாகிய நீங்கள் உங்கள் இறந்துபோன ஆத்மாக்களுக்கு மோட்ச அரச்சனை செய்கின்ற பொழுது நீங்கள் இந்த சிவகுமாரன் மோட்ச நிதியத்துக்கு அன்பளிப்பு செய்து கண்ணிழந்தவர்களின் இந்த கௌரவமான மரணச்சடங்குகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உங்களை அன்பாடு வேண்டுகின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.