வவுனியா நெடுங்கேணிப்பகுதியில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த நபர் ஒருவரை நெடுங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிலரிடம் பணத்தினை பெற்றுள்ளார்.
எனினும் நீண்ட நாட்களாகியும் வெளிநாட்டிற்கு அனுப்பாமையினால் பணத்தை வழங்கிய நபர்கள் அதனை மீளத்தருமாறு கோரியுள்ளனர்.
எனினும்
குறித்த நபர் பணத்தினை மீள வழங்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நெங்கேணி
பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாட்டினை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் அவரை வவுனியா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.