• May 07 2024

பாண் விற்பனை செய்த 100ற்கும் மேற்பட்டோர் கைது..!

Chithra / Feb 7th 2024, 11:19 am
image

Advertisement

 

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவலின்படி, குறைந்த எடையுள்ள பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த 100 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் சோதனைகளை ஆரம்பித்தது.

இதன்படி, பேக்கரிகள் மற்றும் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலை காட்டப்படாத சந்தர்ப்பங்களில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


பாண் விற்பனை செய்த 100ற்கும் மேற்பட்டோர் கைது.  நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவலின்படி, குறைந்த எடையுள்ள பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த 100 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.நேற்று மற்றும் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் சோதனைகளை ஆரம்பித்தது.இதன்படி, பேக்கரிகள் மற்றும் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலை காட்டப்படாத சந்தர்ப்பங்களில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement