• Dec 03 2024

மன்னாரில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்பு - தயார் நிலையில் முப்படை

Chithra / Nov 26th 2024, 9:41 am
image

 

மன்னார் மாவட்டத்தில்  வெள்ளப்பெருக்கு காரணமாக 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள், பொது மண்டபங்கள் இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த நலன்புரி நிலையங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த 1426 நபர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மழை வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அனர்த்தங்கள் ஏற்பட்டால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, 

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்பு - தயார் நிலையில் முப்படை  மன்னார் மாவட்டத்தில்  வெள்ளப்பெருக்கு காரணமாக 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள், பொது மண்டபங்கள் இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.குறித்த நலன்புரி நிலையங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த 1426 நபர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.மழை வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அனர்த்தங்கள் ஏற்பட்டால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement