• Feb 12 2026

ரயிலில் சிக்கிய 6.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள்-ஸ்தம்பித்துப் போன டோக்கியோ!

dileesiya / Jan 16th 2026, 4:19 pm
image

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையால், இன்று காலை நேரப் பயணத்தில் சுமார் 6 லட்சத்து 73 ஆயிரம் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உலகின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களுக்கு சேவை செய்யும் இரண்டு முக்கிய பயணிகள் ரயில் பாதைகள் இந்த மின்தடையால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் (JR East) வெளியிட்ட தகவலின்படி,

யமனோட் (Yamanote) மற்றும் கெய்ஹின்-டோஹோகு (Keihin-Tohoku) ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவைகள் 9 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டன.

டோக்கியோவின் தமாச்சி நிலையத்தில் இரவு நேர பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், மின்சாரம் மீண்டும் வழங்கப்படாததே இந்த சிக்கலுக்குக் காரணமாகும்.

இந்த மின்தடையின் காரணமாக, நிலையங்களுக்கு இடையில் சிக்கிய கெய்ஹின்-டோஹோகு ரயில்களில் இருந்த பயணிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் தண்டவாளங்களில் நடந்து வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக தேங்கியிருந்தமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

ரயிலில் சிக்கிய 6.7 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள்-ஸ்தம்பித்துப் போன டோக்கியோ ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையால், இன்று காலை நேரப் பயணத்தில் சுமார் 6 லட்சத்து 73 ஆயிரம் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.உலகின் மிகப் பரபரப்பான ரயில் நிலையங்களுக்கு சேவை செய்யும் இரண்டு முக்கிய பயணிகள் ரயில் பாதைகள் இந்த மின்தடையால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் (JR East) வெளியிட்ட தகவலின்படி, யமனோட் (Yamanote) மற்றும் கெய்ஹின்-டோஹோகு (Keihin-Tohoku) ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவைகள் 9 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டன.டோக்கியோவின் தமாச்சி நிலையத்தில் இரவு நேர பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், மின்சாரம் மீண்டும் வழங்கப்படாததே இந்த சிக்கலுக்குக் காரணமாகும்.இந்த மின்தடையின் காரணமாக, நிலையங்களுக்கு இடையில் சிக்கிய கெய்ஹின்-டோஹோகு ரயில்களில் இருந்த பயணிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் தண்டவாளங்களில் நடந்து வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்தது.குறித்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக தேங்கியிருந்தமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement