வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இருவாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டுவருகின்றது.
இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதனைத் திருத்துவதற்கான முயற்சிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றையதினம் வவுனியாவில் நீச்சல்குளத்தில் வீழ்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உயிரிழந்திருந்தார்.
அவரது சடலத்தை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் நாளையதினம் காலை மீண்டும் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சட்டவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தால் இறந்தவரின் உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதற்காக செலவினை உயிரிழந்தவரின் உறவினர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ள குடும்பத்தினர் இது தொடர்பாக கவலை தெரிவித்தனர்.
அரசியல் தலையீட்டால் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது
பிண அறையின் குளிரூட்டி பழுது அலட்சியமாக இருந்த வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இருவாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டுவருகின்றது.இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.அதனைத் திருத்துவதற்கான முயற்சிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இன்றையதினம் வவுனியாவில் நீச்சல்குளத்தில் வீழ்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உயிரிழந்திருந்தார்.அவரது சடலத்தை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் நாளையதினம் காலை மீண்டும் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சட்டவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தால் இறந்தவரின் உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதற்காக செலவினை உயிரிழந்தவரின் உறவினர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ள குடும்பத்தினர் இது தொடர்பாக கவலை தெரிவித்தனர்.அரசியல் தலையீட்டால் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது