பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட ஆறு பெண்களைக் கொண்ட குழு, ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் முதல் பெண்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று பூமிக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு டெக்ஸாஸில் இருந்து காலை 9:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த 11 நிமிட பயணம், விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பூமியில் இருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கார்மன் கோட்டை கடந்து, பயணிகளுக்கு 4 நிமிட எடையின்மை அனுபவத்தை வழங்கியது.
கேட்டி பெர்ரி, விண்ணில் பூமியை கண்டபோது "What a Wonderful World" பாடலைப் பாடி உணர்ச்சிகரமான தருணத்தை உருவாக்கினார்.
பயணத்தின் முடிவில், தரையிறங்கியவுடன் மண்ணை முத்தமிட்டு நன்றி தெரிவித்த அவர், இந்தப் பயணம் தனது 4 வயது மகள் டெய்ஸிக்காகவும், அடுத்த தலைமுறை பெண்களுக்கு உத்வேகமாகவும் அமைந்ததாகக் கூறினார்
இந்த விண்வெளி பயணம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாடகி கெட்டி பெர்ரி "முதன்முதலாக விண்வெளிக்குச் செல்லும் அனைத்து மகளிர் குழுவில் நானும் இருப்பேன் என நீங்கள் கூறினால் அதனை நான் நம்பியிருப்பேன்.ஒரு குழந்தையாக எதுவுமே எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது கிடையாது." என்று கூறியுள்ளார்.
கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலண்டினா டெரெஷ்கோவாவின் தனிப் பயணத்திற்குப் பின், முதல் முறையாக பெண்களைக் கொண்ட இந்த விண்வெளி பயணம், பெண்களின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
"இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல்கல் - 11நிமிடத்தில் நிறைவடைந்த பெண்களின் விண்வெளி பயணம் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட ஆறு பெண்களைக் கொண்ட குழு, ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் முதல் பெண்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்து, இன்று பூமிக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேற்கு டெக்ஸாஸில் இருந்து காலை 9:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த 11 நிமிட பயணம், விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பூமியில் இருந்து 100 கிமீ உயரத்தில் உள்ள கார்மன் கோட்டை கடந்து, பயணிகளுக்கு 4 நிமிட எடையின்மை அனுபவத்தை வழங்கியது.கேட்டி பெர்ரி, விண்ணில் பூமியை கண்டபோது "What a Wonderful World" பாடலைப் பாடி உணர்ச்சிகரமான தருணத்தை உருவாக்கினார்.பயணத்தின் முடிவில், தரையிறங்கியவுடன் மண்ணை முத்தமிட்டு நன்றி தெரிவித்த அவர், இந்தப் பயணம் தனது 4 வயது மகள் டெய்ஸிக்காகவும், அடுத்த தலைமுறை பெண்களுக்கு உத்வேகமாகவும் அமைந்ததாகக் கூறினார்இந்த விண்வெளி பயணம் தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாடகி கெட்டி பெர்ரி "முதன்முதலாக விண்வெளிக்குச் செல்லும் அனைத்து மகளிர் குழுவில் நானும் இருப்பேன் என நீங்கள் கூறினால் அதனை நான் நம்பியிருப்பேன்.ஒரு குழந்தையாக எதுவுமே எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது கிடையாது." என்று கூறியுள்ளார்.கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலண்டினா டெரெஷ்கோவாவின் தனிப் பயணத்திற்குப் பின், முதல் முறையாக பெண்களைக் கொண்ட இந்த விண்வெளி பயணம், பெண்களின் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது."இது வெறுமனே ஒரு விண்வெளிப் பயணம் மட்டுமல்ல. இது மக்களின் மனநிலையை மாற்றுவது, எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய பயணம்," என்று ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.