• Nov 28 2024

மகனின் நகை அடகுக் கடையை சூறையாடிய தாய்..! சிசிடிவி கமெராவில் சிக்கிய காட்சி!

Chithra / Dec 11th 2023, 8:15 am
image

 

ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட  நகைகள் மற்றும் பணத்துடன்  ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம்  ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபர் அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.


எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.

அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொலிஸார்  நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


மகனின் நகை அடகுக் கடையை சூறையாடிய தாய். சிசிடிவி கமெராவில் சிக்கிய காட்சி  ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட  நகைகள் மற்றும் பணத்துடன்  ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம்  ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபர் அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொலிஸார்  நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement