• Feb 20 2025

வவுனியாவில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - ஒருவர் பலி , மற்றொருவர் படுகாயம்

Thansita / Feb 17th 2025, 11:02 pm
image

வவுனியா, மன்னார் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரணடு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். 

வவுனியா- மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுவை அண்டிய பகுதியில் குறித்த மோட்டர் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்  மற்றைய நபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நிமல் என்ற நபரே உயிரிழந்துள்ளார் .

விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசன்குளம் பொலிசார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - ஒருவர் பலி , மற்றொருவர் படுகாயம் வவுனியா, மன்னார் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரணடு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். வவுனியா- மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுவை அண்டிய பகுதியில் குறித்த மோட்டர் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்  மற்றைய நபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நிமல் என்ற நபரே உயிரிழந்துள்ளார் .விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசன்குளம் பொலிசார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement