யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இரண்டு இளைஞர்களும், காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் வீட்டு மதிலுடன் மோதி கோர விபத்து - யாழில் இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். சம்பவத்தில் கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இரண்டு இளைஞர்களும், காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.