• Jan 09 2025

அம்பாறையில் மாயமாகும் மோட்டார் சைக்கிள்கள்;பொலிஸார் முக்கிய அறிவிப்பு..!

Sharmi / Dec 25th 2024, 11:59 am
image

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன்  தொடர்புடையதாக குறிப்பிடப்படும்  சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் அண்மைக் காலமாக   மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த திருட்டுச்சம்பங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை இனங்கண்டிருந்தனர்.

அத்துடன் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கீழ்காணும்  குறித்த சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில்  தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்  சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணை தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர் பற்றிய தகவலை  அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.





அம்பாறையில் மாயமாகும் மோட்டார் சைக்கிள்கள்;பொலிஸார் முக்கிய அறிவிப்பு. திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன்  தொடர்புடையதாக குறிப்பிடப்படும்  சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் அண்மைக் காலமாக   மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தன.இந்த நிலையில் குறித்த திருட்டுச்சம்பங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை இனங்கண்டிருந்தனர்.அத்துடன் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கீழ்காணும்  குறித்த சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில்  தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும்  சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணை தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர் பற்றிய தகவலை  அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement