உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தக் கூடிய தினம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் மீண்டும் கூடி இறுதி தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய வேட்பு மனு- மொட்டுக் கட்சி கோரிக்கை. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுவை இரத்து செய்து மீண்டும் புதிய வேட்பு மனு கோரப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தக் கூடிய தினம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எனினும், திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் மீண்டும் கூடி இறுதி தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.