• Jun 17 2024

மஹிந்த தலைமையில் மொட்டு கட்சியின் முதல் தேர்தல் பிரசாரம் இன்று...!

Chithra / May 26th 2024, 11:14 am
image

Advertisement

 

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு இன்று பிற்பகல் அநுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.

இந்நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட தலைவர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, 

வடமத்திய முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இத்தொகுதி மாநாட்டின் பின்னர் மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் தொகுதி மாநாடுகள் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மஹிந்த தலைமையில் மொட்டு கட்சியின் முதல் தேர்தல் பிரசாரம் இன்று.  எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன நடத்தும் முதலாவது தொகுதி மாநாடு இன்று பிற்பகல் அநுராதபுரம் தலாவையில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.இந்நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட தலைவர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.இத்தொகுதி மாநாட்டின் பின்னர் மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் நாடளாவிய ரீதியில் தொகுதி மாநாடுகள் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement