• May 20 2024

மொட்டு கட்சியின் அமைச்சர்களே மக்களின் ஆணையை காட்டிக் கொடுத்தவர்கள் - விளாசிய சாகர.!

Sharmi / Feb 3rd 2023, 11:01 am
image

Advertisement

69 இலட்சம் மக்களின் ஆணையை காட்டிக்கொடுத்தவர்கள் வேறுயாருமில்லை தமது கட்சியில் அமைச்சு பதவிகளை வகிர்தவர்களே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

யார் நாட்டுக்கு சேவை செய்தார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் தமது சுய அரசியல் இலாபத்திற்காக பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக்கி 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் அணியினர்,டலஸ் மற்றும் ஜி.எல் பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியதால் கட்சி செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.அரசாங்கத்தையும், பொதுஜன பெரமுனவையும் விமர்சித்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலானோர் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு கட்சியின் அமைச்சர்களே மக்களின் ஆணையை காட்டிக் கொடுத்தவர்கள் - விளாசிய சாகர. 69 இலட்சம் மக்களின் ஆணையை காட்டிக்கொடுத்தவர்கள் வேறுயாருமில்லை தமது கட்சியில் அமைச்சு பதவிகளை வகிர்தவர்களே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.யார் நாட்டுக்கு சேவை செய்தார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் தமது சுய அரசியல் இலாபத்திற்காக பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக்கி 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் அணியினர்,டலஸ் மற்றும் ஜி.எல் பீரிஸ் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியதால் கட்சி செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.அரசாங்கத்தையும், பொதுஜன பெரமுனவையும் விமர்சித்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலானோர் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement