வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் விஜயம் செய்தார்.
இதன் போது வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.கு.சுகுணனை சந்தித்து வைத்தியசாலையின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் சுகாதார அமைச்சராக சேவையாற்றிய போது வவுனியா வைத்தியசாலையில் உருவாக்கிய நாள்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்பின் ஊடாக அமைக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சைக்கான விசேட பிரிவுகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் மேலதிக தேவைப்பாடுகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.சுகுணன் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ்.சசிகாந்த் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ள மேலும் பல வைத்திய பிரிவுகளை பார்வையிட்டதுடன் அங்கு பணியாற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். அத்துடன் தற்போது நடைபெற்றுவரும் சில வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஆய்வு செய்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் விஜயம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் விஜயம் செய்தார்.இதன் போது வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.கு.சுகுணனை சந்தித்து வைத்தியசாலையின் தேவைப்பாடுகள், பிரச்சினைகள் மற்றும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் சுகாதார அமைச்சராக சேவையாற்றிய போது வவுனியா வைத்தியசாலையில் உருவாக்கிய நாள்பட்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்பின் ஊடாக அமைக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சைக்கான விசேட பிரிவுகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் மேலதிக தேவைப்பாடுகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.சுகுணன் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ்.சசிகாந்த் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டார்.தொடர்ந்து வைத்தியசாலையில் உள்ள மேலும் பல வைத்திய பிரிவுகளை பார்வையிட்டதுடன் அங்கு பணியாற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். அத்துடன் தற்போது நடைபெற்றுவரும் சில வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஆய்வு செய்தார்.